ஆப்நகரம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு : அடுத்த கல்வியாண்டு முதல் 6 பாடங்கள் கட்டாயம்

2017-2018-ம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆறு பாடங்களில் தேர்வு எழுதும் முறை கட்டாயம் ஆக்கப்படுகிறது

TNN 11 Mar 2017, 9:08 am
டெல்லி : 2017-2018-ம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆறு பாடங்களில் தேர்வு எழுதும் முறை கட்டாயம் ஆக்கப்படுகிறது.
Samayam Tamil cbse mandates six subjects for class 10 boards from 2017 18
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு : அடுத்த கல்வியாண்டு முதல் 6 பாடங்கள் கட்டாயம்


மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ ) பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டு மொழிப்பாடங்கள், அறிவியல் , கணிதம், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கு மட்டும் தேர்வு எழுதும் முறை நடைமுறையில் உள்ளது. மேலும் விருப்ப பாடம் ஒன்றை தேர்வு செய்யும் முறையும் இருந்தது.

இந்தநிலையில் 2017-2018-ம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆறு பாடங்களில் தேர்வு எழுதும் முறை கட்டாயம் ஆக்கப்படுகிறது. இந்த ஆறாவது பாடமான தொழில் திறன் வளர்ப்பு விருப்பப்பாடமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆறாவது விருப்பமாடமாக டைனமிக்ஸ் ஆஃப் ரீடெய்லிங், தகவல் தொழில்நுட்பம் , பாதுகாப்பு, ஆட்டோமொபைல் டெக்னாலஜி, இன்ட்ரொடக்‌ஷன் டு பினான்சியல் மார்க்கெட் , இன்ட்ரொடக்‌ஷன் டு டூரிசம், அழகுக்கலை, அடிப்படை வேளாண்மை , உணவு உற்பத்தி , அலுவலக நடைமுறைகள், பேங்கிங் மற்றும் இன்சூரன்ஸ், மார்கெட்டிங் அண்ட் சேல்ஸ், ஹெல்த் கேர் சர்விசஸ் ஆகிய 13 பாடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

CBSE mandates six subjects for Class 10 boards from 2017-18

அடுத்த செய்தி