ஆப்நகரம்

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகாததால் குழப்பத்தில் மாணவர்கள்

சி.பி.எஸ்.இ 12-வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க முடியாமால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

TNN 25 May 2017, 2:13 pm
டெல்லி : சி.பி.எஸ்.இ 12-வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க முடியாமால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Samayam Tamil cbse reslut delay students upset
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகாததால் குழப்பத்தில் மாணவர்கள்


சி.பி.எஸ்.இ 12-வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைப்பெற்றது. இந்த தேர்வில் இந்தியா ழுழுவதிலும் ஏறக்குறைய 11 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு மே மாதம் 1-ம் தேதியே வெளியிடப்பட்டது. தமிழக பாடவழியில் படித்த மாணவர்களுக்கான முடிவு மே முதல் வாரத்திலேயே வெளியிடபட்டது. ஆனால் சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் கடினமான அல்லது தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறைக்கு ஏதிர்ப்பு தெரிவித்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தால் தான் தேர்வு முடிவு வெளிவாவதில் தாமதம் என கூறப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கிற்கு செவ்வாய் கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. டெல்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் , " கடினமான அல்லது தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்த மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். தமிழகத்தில் பெறியியல் படிப்புகளுக்கு விண்ணபிக்க மே 31 கடைசி தேதியாகும். இந்தநிலையில் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் உடனடியாக வெளியிட வேண்டும் என்பதே மாணர்கள் மற்றும் பெற்றோர்களின் ஏதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த செய்தி