ஆப்நகரம்

சென்னையில் மாபெரும் வகுப்பறைக்கான கின்னஸ் சாதனை!

1049 மாணவர்கள் கொண்ட வகுப்பில் உயிரியல் பாடம் நடத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

TNN 15 Oct 2017, 2:59 pm
1049 மாணவர்கள் கொண்ட வகுப்பில் உயிரியல் பாடம் நடத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil chennai students make world record for largest biology class
சென்னையில் மாபெரும் வகுப்பறைக்கான கின்னஸ் சாதனை!


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் நீண்ட உயிரியல் வகுப்பு என்ற கின்னஸ் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து 21 பள்ளிகளில் இருந்து 1,049 மாணவர்களுக்கு லட்சுமி பிரபு என்ற உயிரியல் ஆசிரியர் ஒன்றரை மணி நேரம் வகுப்பு எடுத்தார்.

அனைத்து மாணவர்களும் வகுப்பை கவனிக்கும் விதமாக 10 சிறிய திரைகளும் 2 பெரிய திரைகளும் வைத்து வகுப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த உயிரியல் வகுப்பு ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது.

மனிதனின் மரபணுவை எவ்வாறு எளிதில் கண்டறிவது என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. வகுப்பின் இடையிலும் பின்னரும் மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் ஆசிரியர் பதில் அளித்தார். வகுப்பின் முடிவில் கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த சாதனையின் மூலம் டெல்லியில் 500 மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் வேதியியல் பாடம் நடத்திய கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அடுத்த செய்தி