ஆப்நகரம்

மாற்றுதிறனாளி மாணவிக்காக பள்ளியில் புதிய பாடப்பிரிவை அறிமுகப்படுத்திய கல்விதுறை

பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாற்றுதிறனானி மாணவியின் வேண்டுகோளை தொடர்ந்து அவர் படித்த பள்ளியிலேயே காமர்ஸ் பாடப்பிரிவை பள்ளிக்கல்வி துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

TOI Contributor 9 Jun 2017, 12:35 pm
கோவை : பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாற்றுதிறனானி மாணவியின் வேண்டுகோளை தொடர்ந்து அவர் படித்த பள்ளியிலேயே காமர்ஸ் பாடப்பிரிவை பள்ளிக்கல்வி துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
Samayam Tamil city school gets commerce stream back for disabled girl
மாற்றுதிறனாளி மாணவிக்காக பள்ளியில் புதிய பாடப்பிரிவை அறிமுகப்படுத்திய கல்விதுறை


கோவை மாவட்டம் சீராநாயக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் பீர்த்தி. இவரால் உட்காரவோ அல்லது எழுந்து நடக்கவோ இயலாது. இந்தநிலையில் இவர் கடந்த கல்வியாண்டில் சீராநாயக்கம் பாளையத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். பின்னர் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சிறப்பாக எழுதிய இவர் அந்த தேர்வில் 468 மதிப்பெண்கள் எடுத்தார்.

இதனையடுத்து அவர் இந்த கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பு சேர விரும்ப்பினார். ஆனால் அவர் படித்த பள்ளியில் செய்முறை தேர்வு உடைய அறிவியல் பாடங்களும் , தொழில் முறைப் பாடங்கள் மட்டுமே இருந்தது. செய்முறை தேர்வு இருப்பதால் பீர்த்தியால் அந்த பாடங்களில் சேர முடியாது என்பதால் அவர் காமர்ஸ் பாடப்பிரிவை படிக்க ஆசைப்பட்டார். இதனால் அவர் படித்த அரசு பள்ளியில் காமர்ஸ் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வி துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மாணவி பீர்த்தியின் வேண்டுகோளை ஏற்ற பள்ளிக்கல்வி துறை அவர் படித்த பள்ளியில் காமர்ஸ் பாடப்ப்ரிவை துவங்க கடந்த புதன்கிழமை அனுமதியளித்தது. இதனை தொடர்ந்து முதல் மாணவியாக பீர்த்தி காமர்ஸ் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.தன்னம்பிக்கை உள்ள மாற்றுதிறனாளி மாணிவியின் வேண்டுகோளை ஏற்று பள்ளிக்கல்வி துறை காமர்ஸ் பாடப்பிரிவை அறிமுகப்படுத்தியதை கல்வியாளர்கள் வெகுவாக வரவேற்றுள்ளானர்.

அடுத்த செய்தி