ஆப்நகரம்

​ சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு அறிவிப்பு

டெல்லி: இந்திய விஞ்ஞான – தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) நிறுவனம் இளம் ஆராய்ச்சியாளர் (JRF.) மற்றும் லெச்சரஸ்ஷிப் 2016–ம் ஆண்டு பணிகளுக்கான நெட் தேர்வுக்கான அறிவிப்பை சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனம் வெளியிட்டுள்ளது.

TNN 26 Aug 2016, 2:50 pm
டெல்லி: இந்திய விஞ்ஞான – தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) நிறுவனம் இளம் ஆராய்ச்சியாளர் (JRF.) மற்றும் லெச்சரஸ்ஷிப் 2016–ம் ஆண்டு பணிகளுக்கான நெட் தேர்வுக்கான அறிவிப்பை சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil csir ugc net december notification 2016 released
​ சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு அறிவிப்பு


சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வானது 18.06.16 அன்று நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.

எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள் படித்தவர்களும் , மருத்துவ படிப்புகளான பி.எஸ். எம்.எஸ், எம்.பி.பி.எஸ்., பி.பார்மா படித்தவர்களும், பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் படிப்புகளை முடித்தவரும், இந்த படிப்புகளில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.
இந்த தேர்வை எழுத , பொதுப்பிரிவினருக்கு ரூ.1000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.csirhrdgdg.res.in என்ற முகவரியில் ஆன்லைன் மூலமாக 09.09.2016-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து 16.09.2016 தேதிக்குள் சிஎஸ்ஐஆர் -ரிடம் சென்று சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://csirhrdg.res.in/net_main_notification_dec2016.pdf என்ற இணைய முகவரியில் அதிகார பூர்வ அறிக்கையை பார்க்கவும்.

அடுத்த செய்தி