ஆப்நகரம்

புதிய பாடநூல்களை மே 4ல் அறிமுகம் செய்கிறார் எடப்பாடி

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடைப்படையிலான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கிறார்.

Samayam Tamil 2 May 2018, 5:41 am
சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடைப்படையிலான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கிறார்.
Samayam Tamil edappadipalanismiling_10442_13367


தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் மாற்ற அமைக்கப்படுகிறன. இந்த நூல்களை வரும் 4ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்கிறார்.

1,6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடப்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகின்றன. சென்னையில் வரும் 4ஆம் தேதி (நாளை மறுநாள்) நடக்கும் விழாவில் முதல்வர் எடப்பாட பழனிசாமி இப்பாடப்புத்தகங்களை அறிமுகம் செய்துவைக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நாட்டிலேயே முதல் முறையாக மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட சிறப்பான பாடத்திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும் இது மாணவர்களின் அறிவை வளரச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி