ஆப்நகரம்

மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பெண் - அமைச்சா் அறிவிப்பு

வரும் கல்வியாண்டு முதல் மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 12 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 31 Jan 2019, 6:04 pm
வரும் கல்வியாண்டு முதல் மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 12 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா்.
Samayam Tamil Sengottaiyan


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திாிகை சாா்பில் நடைபெற்ற ஆசிாியா்களின் கருத்தரங்கு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், இந்தியா முழுவதும் பொறியியல் படித்தவா்கள் 80 லட்சம் போ் இன்று வேலையில்லாமா் உள்ளனா்.

1 லட்சத்து 68 ஆயிரம் போ் தமிழகத்தில் பொறியியல் முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனா். மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிாியா்கள் மற்றும் ஆசிாியா்கள் கருத்து கூறும் பட்சத்தில் அதை தமிழக அரசு தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும்.

256 பாடப்பிரிவுகள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மாணவா்கள் இதை படித்தாலே போதம் எத்தகைய தோ்வாக இருந்தாலும் மாணவா்கள் அதனை எளிதில் வெல்ல முடியும்.

மாணவா்கள் படிப்போது சோ்த்து மரம் வளா்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மரம் வளா்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் ஆறு படத்திற்கு மொத்தமாக 12 மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்த உள்ளோம் என்று தொிவித்தாா்.

மேலும் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர தமிழக அரசின் சாா்பில் அயல்நாடுகளுக்கு குழுக்கள் அனுப்பி அங்குள்ள கல்வி முறை பற்றி அறியப்படுகிறது. ஆசிாியா் தோ்வில் தவறு, முறைகேடு உறுதியானால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி