ஆப்நகரம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு விரைவில் துணை வேந்தர் நியமிக்கும் பணி துவங்கும்- மங்கத் ராம் ஷர்மா

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தரை தேர்வு செய்யும் பணிக்கு வரும் நவம்பர் மாதம் தேடல் குழு அமைக்கப்படும் என உயர்கல்வி துறை தலைமை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Sep 2018, 2:18 am
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தரை தேர்வு செய்யும் பணிக்கு வரும் நவம்பர் மாதம் தேடல் குழு அமைக்கப்படும் என உயர்கல்வி துறை தலைமை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ud
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கும் பணி விரைவில் தொடக்கம்


கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த ஏ. கணபதி, துணை பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கல்வித்துறை அவரை பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்கல்வி துறை தலைமை செயலாளர் மங்கத் ஷர்மா பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தர், பதிவாளர், நிர்வாகிகள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு 15 நாட்களுக்குள் விளம்பரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

அதை தொடர்ந்து 2 நடுவர்கள், 2 சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் குழு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.

நேக் தரச்சான்றிதழுக்கான மேம்பாட்டு பணிகளை பாரதியார் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. யுஜிசி-யிடமிருந்து ஒப்புதல் கிடைத்த பிறகு அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி