ஆப்நகரம்

அரையாண்டுத் தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு மற்றும் 'வர்தா' புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 20 Dec 2016, 2:25 pm
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு மற்றும் 'வர்தா' புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil half yearly exams new dates announced
அரையாண்டுத் தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு


இவ்விரு சம்பவத்தின் காரணமாக பள்ளிகளின் வேலை நாட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார் 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பிறகு கடந்த டிச.5 ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி முதல்வர் ஜெயலலிதா மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆகையால், அப்போது நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த டிச.,12ஆம் தேதி சென்னையை புரட்டிபோட்ட 'வர்தா' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுக்கான புதிய தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த டிச.,7, 8 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள், ஜன.,3, 4ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், டிச.,14ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஜன.,5ஆம் தேதி நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Half-yearly exams was Postponed due to Jayalalitha demise and Vardah Cyclone. After the two saddened situation, School Education Department now annaounce the new dates for Conducting Half-yearly exams

அடுத்த செய்தி