ஆப்நகரம்

கோடை விடுமுறையிலும் ஹோம்ஓர்க் கொடுத்த ஆசிரியரைத் தாக்கிய மாணவன்

வயற்றில் மூன்று பலத்த வெட்டுக் காயங்களுடன் முகேஷ் குமாரி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் கான்பூரில் உள்ள பிஐஜி மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளார்.

Samayam Tamil 10 Jul 2019, 10:29 am
அரியானாவில் வீட்டுப்பாடம் செய்யச் சொன்ன ஆசிரியரை 11ஆம் வகுப்பு மாணவர் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil student stabs teacher bccl


அரியானா மாநிலத்தின் கோடை விடுமுறைக்குப் பின் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அன்று சோன்பேட்டில் பிகன் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராம் கிருஷ்ணா பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியரான முகேஷ் குமாரி தனது மாணவர்களிடம் விடுமுறையில் தான் கொடுத்த வீட்டுப்பாடத்தை முடித்திருக்கிறார்களா என்று விசாரிதுள்ளார். அப்போது ஒரு மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஆசிரியரைத் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

"வீட்டுப்பாடத்தை முடித்திருக்கிறானா என கேட்டபோது அவன் திடீரென கத்தியை எடுத்து பலமுறை என்னைத் தாக்கிவிட்டான்" என ஆசிரியர் முகேஷ் குமாரி தெரிவிக்கிறார்.

வயற்றில் மூன்று பலத்த வெட்டுக் காயங்களுடன் முகேஷ் குமாரி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் கான்பூரில் உள்ள பிஐஜி மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளார்.

முகேஷ் குமாரி தாக்கப்பட்டதை அறிந்தவுடன் தலைமை ஆசிரியர் நீரஜ் தியாகியும் மற்றொரு ஆசிரியரும் விரைந்து அந்த வகுப்பறைக்குச் சென்றுள்ளனர். நீரஜ் தியாகி முகேஷ் குமாரியை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல, தப்பி ஓட முயன்ற மாணவரை அவருடன் சென்ற மற்றொரு ஆசிரியர் தடுத்துப் பிடித்துள்ளார்.

இதைப் பற்றி தகவல் அறிந்த டிஎஸ்பி விரேந்திர ராவ் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் நிலை பற்றி மருத்துவ அறிக்கை கிடைத்த பின், வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி