ஆப்நகரம்

கொரோனா வைரஸை எதிர்கொள்ள ‘யுக்தி’ என்ற பெயரில் புதிய தளம்!

கொரோனா வைரஸ் எதிர்கொள்ளுதலை கண்காணிக்கும் வகையில் யுக்தி என்ற பெயரில் புதிய தளத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 13 Apr 2020, 4:43 pm
கொரோனா வைரஸ் எதிர்கொள்ளுதலை கண்காணிக்கும் வகையில் யுக்தி என்ற பெயரில் புதிய தளத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார்.
Samayam Tamil YUKTI


Also Read This:

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஞாயிறன்று ‘யுக்தி’ YUKTI என்ற பெயரில் இணையதள போர்ட்டலை தொடங்கினார். இதன் விரிவாக்கம் YUKTI - Young India Combating COVID with Knowledge, Technology and Innovation ஆகும். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விப்பணியி்ல் உள்ளவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். கல்வி சார்ந்தவர்களுக்கு தேவையான சேவைகளை நல்ல தரத்துடன், அதிகளவில் போர்டலில் வழங்கப்படும். மேலும், கொரோனா வைரஸ் எதிர்கொள்ள கல்வி நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகளையும், உத்திகளையும், மற்ற கல்வி நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடியும்.

தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களில் மனிவள மேம்பாட்டு துறையின் செயல்களை இந்த யுக்தி போர்ட்டல் மூலம் திறம்பட கண்காணிக்க முடியும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதள பக்கத்திற்குச் சென்று பார்க்கலாம்

அடுத்த செய்தி