ஆப்நகரம்

சர்வதேச பல்கலைக்கழக பட்டியல்; இந்திய கல்விநிறுவனங்களுக்கு சரிவு

சர்வதேச அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் சிறந்து விளங்கும் 500 பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் ஒன்றுகூட முதல் 100 இடங்களுக்குள் வரவில்லை.

TNN 6 Sep 2016, 2:33 pm
சர்வதேச அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் சிறந்து விளங்கும் 500 பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் ஒன்றுகூட முதல் 100 இடங்களுக்குள் வரவில்லை.
Samayam Tamil iisc 6 iits slip in qs world university rankings 2016 17
சர்வதேச பல்கலைக்கழக பட்டியல்; இந்திய கல்விநிறுவனங்களுக்கு சரிவு


குவாக்கரேலி சைமண்ட்ஸ் (கியூ எஸ்) என்ற ஆய்வு நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச கல்வி நிறுவனங்களின் பட்டியலை அவற்றின் தரத்தின் அடிப்படையில் வெளியிட்டுவருகிறது. இதன்படி, 2016-17ம் கல்வி ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், அமெரிக்காவைச் சேர்ந்த மஸாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் தொடர்ந்து, 5வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்டான்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்கள் அதற்கடுத்த இடங்களில் உள்ளன. ரஷ்யா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன.

ஆனால், இந்திய தரப்பில் ஒரு கல்வி நிறுவனம் கூட, முதல் 100 இடத்திற்குள் வரவில்லை. ஐஐஎஸ்சி எனப்படும் இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம், இப்பட்டியலில், 152வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டில் இந்நிறுவனம், 150வது இடத்தில் இருந்தது.

இதற்கடுத்தப்படியாக, டெல்லி ஐஐடி நிறுவனம், 185வது இடத்திலும், மும்பை ஐஐடி 219வது இடத்திலும் உள்ளன. ஐஐடி சென்னை, ஐஐடி கான்பூர், ஐஐடி காரக்பூர் மற்றும் ஐஐடி ரூர்கீ ஆகிய நிறுவனங்கள், முறையே 250, 271, 313 மற்றும் 399 ஆகிய இடங்களைப் பிடித்தும் உள்ளன.

சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்புகளில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்றும் இந்த பட்டியலை வெளியிட்டுள்ள க்யூ எஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி