ஆப்நகரம்

1.5 கோடி சம்பளம் வாங்க உள்ள கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்..!

கான்பூர் ஐ.ஐ.டி மாணவரை 1.5 கோடி சம்பளத்திற்கு மைக்ரோ சாப்ட் நிறுவனம் வேலைக்கு தேர்ந்தெடுத்துள்ளது.

TNN 4 Dec 2016, 12:33 pm
கான்பூர் ஐ.ஐ.டி மாணவரை 1.5 கோடி சம்பளத்திற்கு மைக்ரோ சாப்ட் நிறுவனம் வேலைக்கு தேர்ந்தெடுத்துள்ளது.
Samayam Tamil iit kanpur student gets rs 1 5 crore offer from microsoft
1.5 கோடி சம்பளம் வாங்க உள்ள கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்..!


இதுவரை கான்பூர் ஐ.ஐ.டி யில் படித்து வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தில் இதுதான் மிக அதிகம் என கூறப்படுகிறது.மேலும் அமெரிக்காவின் ரிச்மாண்டில் உள்ள மைக்ரோசாப்டின் தலைமையகத்தில் பணிபுரிய அந்த மாணவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

சாப்ட்வேர் டிசைனிங்,சாப்ட்வேர் மேம்பாடு,குறைபாடுகளை கண்டறிதல் ஆகிய வேலைகளை அந்த மாணவர் மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.அந்த மாணவருக்கு ஆண்டு சம்பளம் 94 லட்ச ரூபாய்.இதுபோக மற்ற உதவித் தொகைகளை சேர்த்து,அவருக்கு ஆண்டுக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கும்.கடந்த ஆண்டு ஐ.ஐ.டி கான்பூர் மாணவர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட 93 லட்ச ரூபாய் சம்பளமே,இதுவரை அந்த கல்லூரி மாணவர் பெற்ற அதிகபட்ச சம்பளமாக இருந்தது.

இந்த ஆண்டு கான்பூர் ஐ.ஐ.டியில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூ தேர்வில் சுமார் 200 நிறுவனங்கள் கலந்து கொண்டதாகவும்,வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் குறித்த தகவல்களை வெளியிட முடியாது எனவும் கான்பூர் ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

IIT-Kanpur student gets Rs 1.5-crore offer from Microsoft

அடுத்த செய்தி