ஆப்நகரம்

சென்னை ஐஐடியில் எம்.டெக். படிக்க விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 10ஆம் தேதி முடிவடையும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு தகுதி மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 10 Mar 2019, 12:40 am
சென்னை ஐஐடியில் எம்.டெக். படிக்க வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Samayam Tamil iit-madras-m-tech-application-process-2019-released


சென்னையில் உள்ள ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (IIT Madras) பொறியியல் பட்ட மேற்படிப்புக்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்துவிட்டு சமர்ப்பிக்கலாம்.

மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 10ஆம் தேதி முடிவடையும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு தகுதி மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எம்.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை இருக்கும். எனவே, எம்.டெக் விண்ணப்பத்துடன் கேட் தேர்வு (GATE COAP 2019) விண்ணப்பத்தையும் சேர்த்தே சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை ஐஐடியில் எம்.டெக் படிக்க விண்ணப்பிப்பது எப்படி?

1. https://www.iitm.ac.in/ என்ற சென்னை ஐஐடியின் இணையதளத்துக்குச் செல்லவும்.
2. விண்ணப்பப் பதிவை நிறைவு செய்யவும்
3. விண்ணப்பத்தை நிரப்பவும்.
4. ஸ்கேன் செய்யப்பட்ட தேவையான ஆவணங்களை அப்லோட் (Upload) செய்யவும்.
5. ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
6. விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, அதனை ஒரு பிரிண்ட் அவுட் (Print Out) எடுத்துக்கொள்ளவும்.

அடுத்த செய்தி