ஆப்நகரம்

இஸ்ரோவில் இளம் விஞ்ஞானி பயிற்சி.. 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..

ISRO YUVIKA 2020: இஸ்ரோ இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் (ISRO Young Scientist) விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.

Samayam Tamil 13 Feb 2020, 10:54 am
Indian Space Research Organization (ISRO) இஸ்ரோ நிறுவனத்தில் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இந்த ISRO Young Scientist Program 2020 விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
Samayam Tamil ISRO 2020


எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், அதாவது, தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் https://www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் Young Scientist Programme பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் ஆர்வம், கல்வி திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்துக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அகமதாபாத், பெங்களுரூ, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து பயிற்சிகள் நடைபெறும். இதில் விண்வெளி என்றால் என்ன? அடிப்படை அறிவியல் கோட்பாடுகள், விண்கலன்களின் செயல்பாடுகள் பயன்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை அறிவியலும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும்.

Also Read This:
ISRO Yuvika 2020 பயிற்சி திட்டம் மூலம் தொலைத்தூரத்தில் காணும் ராக்கெட், விண்கலன் ஆகியவற்றை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், வான்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வமும் அதிகரிக்கும். பயிற்சி முடிந்ததும் அதற்கு உரிய சான்றிதழ்களும் வழங்கப்படும்.


இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பயிற்சி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாக மார்ச் மாதம் இறுதியில் அறிவிக்கப்படும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.

ISRO Young Scientist Programme 2020 – Online Registration

அடுத்த செய்தி