ஆப்நகரம்

ஆன்லைன் வகுப்புகளால் மனஅழுத்தம்.. KVS பள்ளி மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு!

KVS பள்ளிகளில் திடீர் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவுன்சலிங் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Apr 2020, 10:15 am
KVS பள்ளிகளில் திடீர் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவுன்சலிங் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil KV School Online Classes


Also Read This:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தினமும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. பள்ளி வகுப்புறையில் பாடம் கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு, இந்த திடீர் ஆன்லைன் வகுப்புகள் புதிய அனுபவமாக உள்ளது.

ஆசிரியர்கள் இல்லாமல், மற்றவர்களிடம் பேச முடியாமல் வெறும் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படலாம் என்று கருதிய KVS நிர்வாகம், அதற்கு தக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் 25 மண்டலங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு இமெயில் மூலமாக கவுன்சலிங் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கா 1,500 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக இமெயில் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் அடிக்கடி இமெயில் மூலமாக பேச வேண்டும். பாடங்களில் எழும் சந்தேகங்களை கேட்டறிந்து, தெளிவுபடுத்த வேண்டும். மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரெதிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி