ஆப்நகரம்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வகம்

பிஜி, பிரிட்டிஷ் கயானா ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியத்தை கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்கள் ஆகியோருக்காக 30 லட்சம் ரூபாய் செலவிடப்படும் எனவும் கூறினார்

Samayam Tamil 22 Jul 2019, 10:10 am
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு சார்பில் தமிழ் ஆய்வகம் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 2


உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ் பேசாதவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள உதவும் கையில் தமிழ் ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை இரண்டாவது மொழிப் பாடமாகத் தேர்வு செய்து படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழக அரசு செலுத்தும் எனவும் இதற்காக ரூ.1.85 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

பிஜி, பிரிட்டிஷ் கயானா ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியத்தை கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்கள் ஆகியோருக்காக 30 லட்சம் ரூபாய் செலவிடப்படும் எனவும் கூறினார்


திருக்குறள் நூலுக்கு உலக நூல் (“World Book”) என்ற அங்கீகாரத்தை வழங்க யுனெஸ்கோ நிறுவனத்திடம் வலியுறுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

அடுத்த செய்தி