ஆப்நகரம்

சென்னை பல்கலை.யில் இனி தொலைதூரக்கல்வி படிப்பவர்கள் கல்லூரிக்கு மாறலாம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி படிப்பவர்கள் கல்லூரிக்கு மாறும் வாய்ப்பை இந்தாண்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Samayam Tamil 20 Apr 2018, 6:12 am
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி படிப்பவர்கள் கல்லூரிக்கு மாறும் வாய்ப்பை இந்தாண்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Samayam Tamil madras university.


சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துரைசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனப் படிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், அதன் பாடத் திட்டங்கள் அனைத்தும், நேரடி பட்டப் படிப்புக்கு இணையானதாக மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டத்தை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதே போல் தேர்வு முறையும், பருவத் தேர்வு முறையாக மாற்றப்பட உள்ளது.<

இதன் மூலம், தொலைதூரக் கல்வி மாணவர் இரண்டாம் ஆண்டில் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினால், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடைமுறையின் அடிப்படையில் அவர் கல்லூரியில் சேர்ந்துகொள்ள முடியும்.

மேலும், கல்லூரியில் படித்து வரும் மாணவர் அல்லது மாணவி தவிர்க்க முடியாத சூழலில் படிப்பைத் தொடர முடியாமல் போனால், அவர் தொலைதூரக் கல்வி முறைக்கு மாறிக் கொள்ள முடியும். இந்த வசதி வரும் கல்வியாண்டு (2018-19) முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி