ஆப்நகரம்

Madras University UG PG Results: மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியானது!!

கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட, சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 27 Jun 2018, 10:09 am
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட, சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
Samayam Tamil மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியானது!!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியானது!!


கடந்த ஏப்ரல் மாதம்,மெட்ராஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கல்லூரிகளில் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான பல்கலைக்கழகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில்,பலர் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை அறிய முற்பட்டதால் அந்த இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. தற்சமயம், சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு இணையதளம் முழு செயல்பாட்டில் உள்ளது.

தேர்வு முடிவுகளை அறிய விரும்பும் மாணவர்கள் ideunom.ac.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். அங்கு results என ஒளிரும் இணைப்பைக் கிளிக் செய்து அதில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு, View results ஐ கிளிக் செய்து உங்கள் மதிப்பெண்ணை அறியவும்.

இதனிடையே, அடுத்தக் கல்வியாண்டிற்கான பிஜி, எம்பில் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், பிஜி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 31 தான் கடைசி நாள் எனவும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி