ஆப்நகரம்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணத்தைத் தடுக்க விரிவான உத்தரவு: நீதிமன்றம்

கட்டண விபரம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படுவதில்லை. இதனால் மெட்ரிக் பள்ளிகளில் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

Samayam Tamil 29 May 2019, 11:14 pm
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்கும் கோரிய வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
Samayam Tamil madurai high court


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அந்தோணி முத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வரம்பில்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கல்வி கட்டண குழு ஒவ்வொரு வகுப்பிற்கும் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த கல்வி கட்டண விபரம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படுவதில்லை.

இதனால் கல்விக் கட்டண விபரம் தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதை பயன்படுத்தி மெட்ரிக் பள்ளிகளில் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண விபரங்களை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே வகுப்பு வாரியாக இணையதளத்திலும், பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிடவும், கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தாரணி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி