ஆப்நகரம்

தமிழகத்தில் நாளை எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு, தர வரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

தமிழத்தில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை துவங்குகிறது. இதற்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

TOI Contributor 23 Aug 2017, 10:40 am
தமிழத்தில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை துவங்குகிறது. இதற்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
Samayam Tamil mbbs counselling will be starting from tomorrwo rank list weill be released today
தமிழகத்தில் நாளை எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு, தர வரிசைப் பட்டியல் இன்று வெளியீடு


மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் ஓராண்டு விலக்கு கோரும் தமிழக அரசின் மனு மற்றும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற சிபிஎஸ்சி மாணவர்களின் மனு ஆகியவற்றின் மீது உச்சநீதிமன்றம் நேற்று முக்கியத் தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றத்தின் நேற்றைய விசாரணையின்போது, எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்ற பிறகு, ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கும் ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நீட் தேர்வின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தமிழக அரசு கட்டாயமாக உடனே செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு கடந்த ஜூன் 27 முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்தப் படிப்புகளுக்கு 50,558 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் 3,536 பொது மருத்துவ இடங்கள் உள்ளன. 100 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இதேபோல் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,445 இடங்கள் உள்ளன.

முதல் கட்டமாக நாளை (வியாழக் கிழமை) மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடக்கிறது. வரும் 25ஆம் தேதி முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கும். செப்டம்பர் 10ஆம் தேதி வரை பல் மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கும்.

தர வரிசைப் பட்டியல் கீழப்பாக்கம் கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும். கல்தாய்வு ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கத்தில் நடைபெறும்

MBBS councelling will be starting from tomorrwo; rank list weill be released today

அடுத்த செய்தி