ஆப்நகரம்

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை விவரம் அறிவிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம், தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு உள்ளிட்ட விவரங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

TNN 25 May 2016, 12:59 pm
சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம், தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு உள்ளிட்ட விவரங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil medical college admission formalities announced
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை விவரம் அறிவிப்பு


மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (நீட்) இந்த ஆண்டுக்கு மட்டும் ரத்தானதையடுத்து, மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம், தரவரிசைப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மேலும், நுழைவுத்தேர்வு குறித்து மாணவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா உறுதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா கூறியதாவது: மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வருகிற ஜூன் 7-ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் என்றார்.

மேலும், தரவரிசைப் பட்டியல் வருகிற ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் அளித்த விமலா, வருகிற ஜூன் 20-ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வும், ஜூலை 18-ம் தேதியன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என்றார்.

அடுத்த செய்தி