ஆப்நகரம்

நீட் தேர்வு -2017 முதல் தேர்வாக கருதப்படும் : சிபிஎஸ்இ

மருத்தவப்படிப்புகான நீட் நுழைவுத் தேர்வவை மூன்று முறை எழுதலாம் என்ற அளவீட்டின் படி இந்தாண்டு நடைபெற இருக்கும் தேர்வு முதல் தேர்வாக கருத்தப்படுமென்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

TNN 3 Feb 2017, 7:32 pm
மருத்தவப்படிப்புகான நீட் நுழைவுத் தேர்வவை மூன்று முறை எழுதலாம் என்ற அளவீட்டின் படி இந்தாண்டு நடைபெற இருக்கும் தேர்வு முதல் தேர்வாக கருத்தப்படுமென்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Samayam Tamil neet exam attempts consider only this year onwards
நீட் தேர்வு -2017 முதல் தேர்வாக கருதப்படும் : சிபிஎஸ்இ

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில், மூன்று முறைகளுக்கு மேல் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, மூன்று முறை நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதி இருந்தது. அதன்படி, தேர்வர்களின் மூன்று முறை நீட் எழுதுவதற்கான அளவீடு, இந்த ஆண்டில் இருந்து கணக்கிடப்படும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.

மேலும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி