ஆப்நகரம்

இனி நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தாது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

இனி வரும் காலங்களில் நீட் தேர்வை, சிபிஎஸ்இக்குப் பதிலாக தேசிய தேர்வு முகமை நடத்தும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 12 Jun 2018, 5:21 pm
இனி வரும் காலங்களில் நீட் தேர்வை, சிபிஎஸ்இக்குப் பதிலாக தேசிய தேர்வு முகமை நடத்தும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil இனி நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தாது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
இனி நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தாது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில், பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததாக அந்தத் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமையே நடத்தும் எனவும், மேலும் நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி