ஆப்நகரம்

2019 முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு: எம்.பி. பூனியா தகவல்!

2019 கல்வியாண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக, மத்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணை தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Jul 2018, 3:50 pm
2019 கல்வியாண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக, மத்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணை தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mp
2019 முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு: எம்.பி. பூனியா தகவல்!

தமிழகத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளில் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த்து. இந்த நிலையில், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, அகில இந்திய அளவிலான நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகள் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையையும் நீட் தேர்வு அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிலைய பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட எம்.பி. பூனியா கூறுகையில், மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் நீட் தேர்வு போலவே என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு நடத்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே 2019 கல்வியாண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி