ஆப்நகரம்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு.. 4,250 மாணவர்களின் கைரேகை விபரங்களை சேகரிக்க உத்தரவு!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 16 Oct 2019, 4:34 pm
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது என்பது தேசிய அளவிலான முறைகேடு என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஏன் ஒப்படைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.
Samayam Tamil madurai court


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த வழக்கில் சிபிசிஐடி தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில், நீட் முறைகேட்டில் இதுவரையில் 4 மாணவர்கள் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 19 மாணவர்கள் மீது சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடத்தில் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான மாணவர்கள் தமிழகத்திலிருந்து வெளியேறி வெளிமாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுதியாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது மாநில அளவிலான முறைகேடு இல்லை. தேசிய முறைகேடு என்று கருத்து தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் விசாரித்தால் தான் சரியாக இருக்கும் என்று கருதிய நீதிபதிகள், சிபிஐ.,யை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக வரும் 24 ஆம் தேதிக்குள் சிபிஐ பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிபிசிஐடி தரப்பு விசாரணை மிகமென்மையாக நடந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று சிபிசிஐடிக்கு அறிவுறுத்தினர். இதே போல், நீட் தேர்வு எழுதி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 4 ஆயிரத்து 250 மாணவர்களின் ஆதார் கைரேகை பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி