ஆப்நகரம்

நீட் முறைகேடு விவகாரம்: தருமபுரி மருத்துவ மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

NEET impersonation 2019: Dharmapuri NEET impersonation bail: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தருமபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Oct 2019, 12:37 pm
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக தருமபுரி மாணவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியுள்ளது.
Samayam Tamil madurai court


அண்மையில் தருமபுரியைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் நீட் தேர்வில் முறைகேடு செய்து கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதனையடுத்து அவரையும், அவரது தாயார் மைனாவதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில் தருமபுரி மாணவி தனக்கும், தனது தாயாருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு அளித்திருந்தார்.

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள்: பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

அவர் அளித்த மனுவில், நீட் முறைகேடு தொடர்பான காவல்துறை விசாரணை முடிந்துவிட்டது. இருப்பினும் எங்களை விடுவிக்கவில்லை. எனது தாயார் மேனாவதி இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலீசார் தரப்பு வாதத்தை கேட்டனர். அதற்கு பதிலளித்த சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர், தருமபுரி மாணவியின் தாயார் மேனாவதி விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறினர்.

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்!

பின்னர், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தருமபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார். மேலும், அவருடைய தாயார் மேனாவதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

அடுத்த செய்தி