ஆப்நகரம்

நீட் ஆள் மாறாட்டம் எதிரொலி.. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் தீவிர சோதனை!

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் யாராவது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்துள்ளாரா என்று அவர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.

Samayam Tamil 23 Sep 2019, 1:12 pm
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்த சம்பவம் எதிரொலியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.
Samayam Tamil thoothukudi medical college


அண்மையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் உதித் சூர்யா என்ற முதலாமாண்டு மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மருத்துவக்கவுன்சில் மற்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

(முடிந்தது தேர்வு.. நாளை முதல் காலாண்டு விடுமுறை!)


இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் முதலமாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, மருத்துவக்கல்லூரிகளில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மாணவர்களின் விவரங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று (திங்கள்) தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் கல்விச்சான்றிதழ்களை விசாரணைக்குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். முதலாமாண்டு மாணவர்களின் நீட் தேர்வு நுழைவுச்சீட்டு, கவுன்சலிங் கடிதம், மாணவர்களின் புகைப்படம் என அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தேனி மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் விசாரணை!

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் 69 மாணவர்கள், 81 மாணவிகள் மொத்தம் 150 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று கல்லூரிக்கு வருகை புரிந்துள்ளனர். நீட் ஹால் டிக்கெட், நீட் அலாட்மெண்ட் ஆர்டர், அட்மிஷன் புகைப்படம், உடற்அடையாள புகைப்படம் என மாணவர்களின் அனைத்து சுயவிபரங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
மறுபடியும் மொதல்ல இருந்தா..! மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு...

இந்த ஆய்வு காலை முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெற்றது. 3 துறை தலைவர்கள், துணை முதல்வர், ஜே.ஏ.ஓ என மருத்துவ பேராசிரியர்கள் விசாரணைக்குழுவில் உள்ளனர். மாணவர்கள் சேர்க்கையில் ஏதேனும் முறைகேடு நடைபெற்றிருந்தால், அது பற்றி உடனடியாக மருத்துவக்கல்வி இயக்குநரகத்துக்கு தெரிவிக்கப்படும் என்று விசாரணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி