ஆப்நகரம்

2017 நெட் தேர்வு; விண்ணப்பம் செய்ய நவ.16 கடைசி நாள்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) மூலம் நடத்தப்படும் தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வு, வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு வரும் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

TOI Contributor 13 Oct 2016, 8:38 pm
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) மூலம் நடத்தப்படும் தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வு, வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு வரும் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil net 2017 exam nov 16 is last date to apply
2017 நெட் தேர்வு; விண்ணப்பம் செய்ய நவ.16 கடைசி நாள்!

இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.

தற்போது வரும் டிசம்பர் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வானது 2017 ஜனவரி 22 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு http://cbsenet.nic.in/cms/public/home.aspx என்ற இணையதளம் மூலம் வரும் 17-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க நவம்பர் 16 -ஆம் தேதி கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை நவம்பர் 17 -ஆம் தேதி வரை செலுத்த முடியும். தேர்வு தொடர்பான முழு விவரங்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

அடுத்த செய்தி