ஆப்நகரம்

எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ படிப்புகள் அறிமுகம்!

எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பரவு நோயியல் துறையில் புதிதாக இரண்டு மருத்துவ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 17 Sep 2018, 4:32 pm
எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பரவு நோயியல் துறையில் புதிதாக இரண்டு மருத்துவ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil Fees-Hike-for-Medical-Courses
எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ படிப்புகள் அறிமுகம்!tam


எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பரவு நோயியல் துறையில் பொது சுகாதாரம், பரவு நோயியல், உயிர் புள்ளியல் ஆகிய பிரிவுகளில் பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும் பொது சுகாதாரம், சமூக மருத்துவம், பரவு நோயியல், உயிர் புள்ளியியல் ஆகிய 4 பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்பு சார்ந்த ஆய்வுகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் பரவு நோயியல் துறையில் இந்த ஆண்டு முதல் சுகாதார மேம்பாடு மற்றும் கல்வி, பொது சுகாதார இதழியல் ஆகிய இரண்டு முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது பரவு நோயியல் துறையில் நடத்தப்படும் 6 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு 2018-19ம் ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகுதி, கால அட்டவணை, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை www.tnmgrmn.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர வேண்டும் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி