ஆப்நகரம்

நெக்ஸ்ட்: மருத்துவப் படிப்புக்கு புதிய நுழைவுத் தேர்வு

இந்தியாவில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள நினைக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்ற புதிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 22 May 2018, 11:43 am
இந்தியாவில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள நினைக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்ற புதிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil F1.large


தற்போதைய நடைமுறைப்படி இந்தியாவில் மருத்துவம் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வு (Foreign Medical Graduates Exam - FMGE) என்ற நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் இந்தத் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெறுபவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெறுவார்கள்.

இந்தத் தேர்வுக்குப் பதிலாக புதிதாக நெக்ஸ்ட் (National Exit Test - NEXT) என்ற தேர்வை அறிமுகம் செய்ய மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதனால், இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியும் நிலை ஏற்படும்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் (2018) இது முக்கியமான அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பினால், அவர்கள் கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது நினைவூட்டத்தக்கது.

அடுத்த செய்தி