ஆப்நகரம்

2018 டிசம்பர் மாத நெட் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது- முழு விபரம்

2018, டிசம்பர் மாதம் இந்தியளவில் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் http://ntanet.nic.in/ntaresults/root/LoginPageDob.aspx இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Jan 2019, 1:16 am
யுஜிசி நெட் தேர்வுக்கான முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil NET_RESULT


கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தேசிய தேர்வு முகமையின் முதல் நெட் தேர்வு டிசம்பர் மாதம் 18-ம் தேதி மற்றும், 22-ம் தேதி ஆன்லைனில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ம் தேதி நெட் தேர்வுகளுக்கான ஆன்சர்கீ தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் வெளியிடப்பட்டது. யுஜிசி நெட் ஆன்சர்கீயை எப்படி டவுன்லோடு செய்வது என்பதற்கான வீடியோவும் அதில் வழங்கப்பட்டது.

நெட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

தற்போது, 2018 டிசம்பர் 18ம் தேதி மற்றும் 22ம் தேதி வரை நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள், தேசிய தேர்வு முகமையின் இணையப்பக்கத்தில் ntanet.nic.in. வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 598 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட டிசம்பர், 2018 நெட் தேர்வுகளை 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். மேலும் இம்முறை முதன்முறையாக நெட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதற்காக தேர்வு நடத்தப்பட்ட அனைத்து அறைகளிலும் சுமார் 8,000 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்டது.

அடுத்த செய்தி