ஆப்நகரம்

மருத்துவ தேர்வு: தமிழக, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விலக்கு

தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு ( இந்த ஆண்டுக்கு) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 24 May 2016, 10:25 am
தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு ( இந்த ஆண்டுக்கு) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil president pranab mukherjee has signed the ordinance
மருத்துவ தேர்வு: தமிழக, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விலக்கு


தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கு தமிழகம், மகாராஷ்டிரம் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு வேண்டாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று கூறப்பட்டு வந்தது. மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களும் இதே கோரிக்கை வைத்து வந்தன.

தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், இந்த மாநிலங்களில் இந்த ஓராண்டுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்து அதுதொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவசர சட்டம் கொண்டு வந்து இருந்தது.

இந்நிலையில், இந்த அவசர சட்டம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து நேற்று மத்திய சுகாதார நலத்துறை அமைச்சர் நட்டா விளக்கம் அளித்தார்.

இந்த சட்டத்திற்கு தற்போது தற்போது ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளார். இதன்படி, தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், மாநில மருத்துவக் கல்லூரிகளில் தாங்களே மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கலாம். அல்லது தேர்வு நடத்தி சேர்த்துக் கொள்ளலாம்.

மத்திய அரசு சார்ந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், மாநில கல்லூரிகளில் சேர நீட் தேவையில்லை. மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். ஏற்கனவே முதல் கட்ட நீட் தேர்வு முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு ஜூன் 24ஆம் தேதி நடக்கிறது.

அடுத்த செய்தி