ஆப்நகரம்

JIPMER மருத்துவக் கல்லூரியில் NEET தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை!

JIPMER Admission 2020: ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் நீட் நுழைவுத்தேர்வு NEET 2020 அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்

Samayam Tamil 18 Feb 2020, 8:53 am
இந்த 2020 கல்வியாண்டு முதல் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மருத்துவக்கல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil JIPMER NEET Admission 2020


எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகள் படிப்பதற்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளில் மட்டும் நீட் தேர்வு இல்லாமல், அந்த கல்வி நிறுவனம் சார்பில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும், 2020 கல்வியாண்டு முதல் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 2020 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பபட்டுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியை பொறுத்தவரையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளது. அவற்றில் 150 இடங்கள் புதுச்சேரி, 50 இடங்கள் காரைக்கால் ஆகும். இந்த 2020 கல்வியாண்டு முதல் 50 மருத்துவ இடங்கள் கூடுதலாக்கப்பட்டு, 250 சீட் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில், சான்றிதழ் படிப்பு, முதுநிலை அடிப்படை பட்டயப்படிப்பு, பி.ஹெச்டி, இளநிலை, முதுநிலை மருத்துவப்படிப்புகள் உள்ளது.

அடுத்த செய்தி