ஆப்நகரம்

விதிகளை பின்பற்றாத 1,971 பள்ளி வாகனங்களுக்குத் தடை!

பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகளை பூர்த்தி செய்யாத 1,971 பேருந்துகள், வேன்களை இயக்க போக்குவரத்துறை தடை விதித்துள்ளது.

Samayam Tamil 5 Jun 2019, 11:14 am
பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகளை பூர்த்தி செய்யாத 1,971 பேருந்துகள், வேன்களை இயக்க போக்குவரத்துறை தடை விதித்துள்ளது.
Samayam Tamil school van


தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மொத்தம் 32,936 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டு மே மாதத்தில் இந்த வாகனங்கள் அனைத்தும் சிறப்பு தணிக்கை செய்யப்படும். அப்போது விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை தடை செய்யப்படும். வாகன கண்காணிப்பு குழுவின் தகுதிச் சான்றிதழ் பெற்ற பின்னரே அந்த வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

அந்த வகையில், நேற்று முன்தினம் (ஜூன். 3) வரையில் மொத்தம் 33 ஆயிரத்து 17 பள்ளி வாகனங்களை வருவாய்துறை அதிகாரிகள், போக்குவரத்து, கல்வி, காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், 1,971 வாகனங்கள் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல், சிறப்பு விதிகளை பூர்த்தி செய்யாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்கள் அனைத்தும் தகுதியிழப்பு செய்யப்பட்டது. மேலும், தகுதியிழப்பு செய்யப்பட்ட 1,971 வாகனங்களை உரிய அனுமதிச் சான்றிதழ் இன்றி இயக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி