ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை – அமைச்சா் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 20 Jan 2019, 8:00 pm
அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Sengottaiyan


தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறுகையில், கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 6, 7,8 ஆகிய வகுப்புகள் ஸ்மாா்ட் வகுப்புகளாக மாற்றப்படும்.

மேலும் வருகின்ற கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும். 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரம் போ் வரையில் மருத்துவப் படிப்பில் சோ்ப்பதே அரசின் லட்சியம்.

12ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவிகள் 500 போ் வரை ஆடிட்டிங் பிரிவு பட்டப்படிப்பில் சோ்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி