ஆப்நகரம்

அடுத்த ஆண்டு முதல் பள்ளிப் பாடங்கள் குறையும்

அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிப் பாடத்திட்டத்தில் 10 முதல் 15 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Sep 2018, 8:44 am
அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிப் பாடத்திட்டத்தில் 10 முதல் 15 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
Samayam Tamil hcfz4M70ZzTVGlob


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வியாழக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என வலியறுத்தி ஒரு லட்சத்திற்கும் மேலான கோரிக்கைகள் வந்துள்ளன என்றும் இதனால் அடுத்த கல்வி ஆண்டு முதல் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் 10-15% குறைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தைப் பின்பற்றும் சி.பி.எஸ்.இ. மற்றும் ஸ்டேட் போர்டு பள்ளிகளுக்கு இந்த மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமலாக வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் ஜவடேகர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி