ஆப்நகரம்

காலியான 4 லட்சம் பணியிடங்கள்; சரியான நேரம் பார்த்து மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசுப் பணியிடங்களில் 4 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 21 Dec 2017, 2:46 pm
டெல்லி: மத்திய அரசுப் பணியிடங்களில் 4 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil shortage of ias ips with 4 lakh vacancies says central minister
காலியான 4 லட்சம் பணியிடங்கள்; சரியான நேரம் பார்த்து மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!


மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, மத்திய அரசு பணியிடங்கள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்சங்கர் நினமா, ஹரீஸ் மீனா பூரா நரசய்யா கவுடா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், மத்திய அரசின் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் தொடர்பான அறிக்கைப்படி, கடந்த 2016 மார்ச் 1 அன்று 4,12,752 இடங்கள் காலியாக உள்ளன.

மொத்தமுள்ள பணியிடங்கள் 36,33,935 ஆகும். இவை பதவி உயர்வு, ஓய்வு, பணியின் போது மரணம் ஆகிய காரணங்களால் ஏற்பட்டுள்ளன.

கடந்த 3 வருடங்களில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் யு.பி.எஸ்.சி., மூலம் 16,420 பேர் தேர்வு நடத்தியும், 4,633 பேர் நேரடியாகயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.சி அமைப்பு மூலம் 1,60,642 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shortage of IAS, IPS with 4 lakh vacancies says Central Minister.

அடுத்த செய்தி