ஆப்நகரம்

வேளாண் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில், இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 3 மணி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 May 2018, 4:52 pm
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில், இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 3 மணி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil வேளாண் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
வேளாண் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!


தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் மொத்தமுள்ள 3‌ ஆயிரத்து 422 இடங்களுக்கு 65 சதவிகிதம் பல்கலையாலும், 35 சதவிகித இடங்கள் அந்தந்தக் கல்லூரிகளாலும் நிரப்பப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று மதியம் 3 மணி முதல் தொடங்குகிறது.

விண்ணப்பிக்கும் முறை

மாணவர்கள்www.tnau.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி


வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை

விண்ணப்பக் கட்ட‌ணத்தை இணைய தள வங்கி சேவை, கிரெடிட், டெபிட் அட்டை‌கள் மூலமாகவும் ‌செலுத்தலாம். இத்தகைய வசதி இல்லாதவர்கள் ஸ்டேட் வங்கி கிளைகளில் கட்டணத்தை செலுத்தலாம்.

முதல்கட்ட கலந்தாய்வு தேதி

தரவரிசை பட்டியல், ஜூன் 22 ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய www.tnau.ac.in என்ற இணையதளத்தை அணுகவும்.

அடுத்த செய்தி