ஆப்நகரம்

ஜூன்- 7-ல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜுன்-1-ம் தேதிக்கு பதில் ஜூன் -7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

TNN 26 May 2017, 2:06 pm
சென்னை : தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜுன்-1-ம் தேதிக்கு பதில் ஜூன் -7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
Samayam Tamil summer vcaction extented school will open june 7
ஜூன்- 7-ல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குளாகி வருகின்றனர். அக்னி நட்சத்திரமானது வரும் 28-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இருந்த பொதிலும் தமிழகத்தில் வெயின் தாக்கம் ஜுன் முதல் வாரம் வரை அதிகமாக இருக்கும் என்று கணிக்ககபட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றொர்கள் தரப்பில் கோரிக்கை வைக்ப்பட்டது. இதனையடுத்து தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது" தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜுன்-1-ம் தேதிக்கு பதில் ஜூன் -7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

மேலும் பள்ளிகள் திறக்கப்படும் அன்றே புத்தகங்கள், சிருடைகள் வழங்கப்படும் , இலவச பஸ் பாஸ்கள் ஒரு வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் " என்று கூறினார்.

summer vcaction extented : school will open june 7

அடுத்த செய்தி