ஆப்நகரம்

அரசு மாணவர்கள் விடுதிகளில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு!

பிற்படுத்தப்ட்டோர் நலத்துறை விடுதிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்பட உள்ளது.

Samayam Tamil 8 Feb 2020, 9:26 am
தமிழகத்தில் 1,480 அரசு மாணவர்கள் விடுதிகளில் பயோமெட்ரிக் முறையில் வருகைபதிவு செய்யப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil TN Biometric Attendance


தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் சுமார் 1,480 மாணவர்கள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் அரசு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 85,000 மாணாக்கர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாணவர்கள் விடுதிகளில் சமையலர், வாட்ச்சேன் பணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக பிறபடுத்தப்ட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ் கூறினார். மேலும், தற்போது விருதுநகர், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதத்திற்குள் மற்ற மாவட்டங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்பபடும். விடுதி காப்பாளர் பணிக்கு 300 காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். மாணவர்கள், விடுதி காப்பாளர்கள், ஊழியர்களை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். மாணவர்களின் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்.

விடுதி மாணவர்களின் வசதிக்காக இரும்பு கட்டில் ஏற்படுத்தி தரப்படும். மலைப்பகுதி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகளில் மரக்கட்டில் செய்துத் தரப்படும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில், ஆண்டுதோறும் 100 மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், உதவித்தொகை தேவைப்படும் மாணவர்கள், சென்னை எழிலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். இதே போல், கல்லூரி படித்து முடிக்கும் மாணவர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ் தெரிவித்தார்.

அடுத்த செய்தி