ஆப்நகரம்

அனைத்துப் பள்ளிகளிலும் ‘ஆல் பாஸ்’ உறுதி செய்ய உத்தரவு!

அனைத்துப் பள்ளிகளிலும் 1 - 9 வகுப்பு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பதை உறுதி செய்து, தேர்ச்சி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநனரகம் அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Mar 2020, 3:01 pm
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வின் தேர்ச்சி பெற்றதை உறுதி செய்து, அதனை பதிவு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Samayam Tamil TN School Education Department


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தாண்டு, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த மூன்றாம் பருவ தேர்வு தேர்வு ரத்து செய்ய்பப்பட்டுள்ளது. கட்டாய கல்விச் சட்டத்தின்படி, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி, அதாவது ‘ஆல் பாஸ்’ செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்டதை உறுதி செய்து, அதனை பதிவு செய்யும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் அனைத்த மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும். எனவே, செல்போன் மற்றும் இமெயில் மூலமாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இது தொடர்பான உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மேலும், மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பதை உறுதி செய்து, தேர்ச்சி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்’ இவ்வாறு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி