ஆப்நகரம்

TNDTE: இன்ஜினியரிங் மாணவர்கள் வீட்டிலிருந்து படிப்பதற்கு ஏற்பாடு!

TN Engineering Online Class: TNDTE எனப்படும் தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநனரகம், இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பதற்கு காணொலி விரிவுரைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 14 Apr 2020, 3:17 pm
இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பதற்கு, தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநனரகம், காணொலி விரிவுரைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil TNDTE Online Class


கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், மே 3 ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு நீட்டிப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றலை தொடரவும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

Also Read This:

அந்த வகையில், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், பொறியியல், தொழில்நுட்ப மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, தங்களுக்கான பாடங்களை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும், ஸ்பெஷல் ஆப் மூலமாகவும் படித்துக் கொள்ளலாம்.

இதன் முதற்கட்டமாக இயற்பியல், கணிதம், கெமிக்கல் இன்ஜினியரிங், டிசைனிங், மெசர்மென்ட், மெஷின் இன்ஜினியரிங் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான காணொலி விரவுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படும்.

இன்ஜினியரிங், தொழில்நுட்ப மாணவர்கள் www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கண்ட காணொலி விரிவுரைகளைப் பார்த்து படித்து பயன்பெறலாம். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கலாம்.

அடுத்த செய்தி