ஆப்நகரம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிப்போகிறது..!

தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 3வது வாரத்தில் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 30 Jun 2017, 8:59 am
சென்னை: தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 3வது வாரத்தில் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tamil nadu engineering admission tnea counselling postponed
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிப்போகிறது..!


தமிழகத்தில் உள்ள 584 பொறியியல் கல்லூரிகளில் சேர சுமார் 1,41,077 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூன் 27ஆம் தேதி துவங்கும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், கலந்தாய்வு மீண்டும் தள்ளிப்போகிறது.

நீட் தேர்வு விவகாரம் காரணமாக பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் என இரு படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ள மாணவர்கள், மருத்துவ இடம் கிடைக்காத பட்சத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருவார்கள். இதனால், மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பின்னர்தான் பொறியியல் கலந்தாய்வு தொடங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 17ஆம் தேதி தொடங்குவதால், பொறியியல் கலந்தாய்வு, ஜூலை மாதம் 3-வது வாரம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வு ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என்பதால், கல்லூரிகளில் வகுப்புகள் தாமதமாக தொடங்கும். இதற்கான அனுமதியை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில்(ஏ.ஐ.சி.டி.இ.) பெறப்படும் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Engineering Admission (TNEA) counselling postponed to 3 week of July, due to delay in Medical Conuselling.

அடுத்த செய்தி