ஆப்நகரம்

வெறும் 2 மணி நேரம் தான் நீட் பயிற்சி; அவதிப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 28 Aug 2019, 5:18 pm
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வெறும் 2 மணி நேரம் மட்டுமே நடப்பதாக செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil tn neet coaching


மருத்துவப்படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களும், வசதி படைத்த மாணவர்களும் நீட் தேர்வுக்காக பிரத்யேகமாக கோச்சிங் சென்டர் சென்று வருகின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களும், ஏழை மாணவர்களுக்கும் நீட் தேர்வு என்றால், என்னவென்று புரியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முன்பு நீட் தேர்வு நடந்த போது, தமிழக அரசு சார்பில் உண்டு, உறைவிடம் வழங்கி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு மாணவர் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போனது.

இதனையடுத்து இந்தாண்டு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச நீட் பயிற்சி அதிகதரத்துடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, ஒரு நாளைக்கு வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.

அந்த இரண்டு நேரத்திலும் பாடம் சம்பந்தான பயிற்சி சொல்லிக்கொடுப்பதில்லை. வெறும் ஆலோசனைகளை மட்டும் கூறிவிட்டு, மற்றதை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு பயிற்சி வழங்கப்படும் என்று வகுப்புகளை முடித்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

(‘எங்களுக்கும் இலவச லேப்டாப் வேணும்’ ஓவிய ஆசிரியர்கள் வேண்டுகோள்)

நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் பொறுப்பை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு ஆன்லைன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காலையில் 10 மணிக்கு நீட் பயிற்சி தொடங்கப்பட்டு, மதியம் 12 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது.

தனியார் பள்ளி மாணவர்கள் நல்ல வசதியாக கோச்சிங் சென்டர் சென்று பயிற்சி பெறுகின்றனர். அந்த வாய்ப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சியை அதிக தரத்துடனும், முழு பொறுப்புடனும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அடுத்த செய்தி