ஆப்நகரம்

குழந்தைகளுக்கான சத்துணவில் இனி மா, பழா, ஆப்பிள் பழங்களும் உண்டு!

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு இனி மதிய உணவோடு சேர்த்து பால், பழங்கள் வழங்குவதற்கு தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.

Samayam Tamil 4 Jul 2019, 3:35 pm
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில், இனி மா, பழா, ஆப்பிள் போன்ற பழங்களும் சேர்ப்பதற்கு தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
Samayam Tamil mid day meal


தமிழகத்தில் சுமார் 43,143 மதிய உணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். 13 வகையான சாதம், காய்கறிகள், முட்டை என ஒரு வாரத்திற்கு ஐந்து முறை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் 1,600 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது.

தற்போத ஆவின் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதால், சத்துணவோடு சேர்த்து தினமும் ஒரு கப் பால் வழங்குவது பற்றி தமிழக அரசு ஆவின் நிறுவனத்தோடு ஆலோசித்து வருகிறது. மேலும், குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தில் ஆப்பிள், மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட கனிகளும் சேர்ப்பது குறித்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும், பால் உற்பத்தியாளர்கள், பழங்கள் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும்.

இது தொடர்பாக அம்பத்தூரைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் சுந்தரம்மாள் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேட்டியுள்ளித்துள்ளார். அப்போது பேசிய அவர்: ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு பழச்சாறு வழங்கப்பட்டது. ஆனால், பால் வழங்கும் திட்டத்தை போல் இந்த திட்டமும் காணாமல் போனது. ஒவ்வொரு திட்டமும் வரும் போது, அதை தொடர்ந்து அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இப்போது புதிதாக சத்துணவில் பழங்கள் வழங்கும் முறை கொண்டு வரப்படுகிறது. பாலும், பழங்களும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு பொருளாகும். இது போன்ற திட்டங்கள் சரியாக செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்’. இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு முன்பு கடந்த 20 ஆணடுகளுக்கு முன்பு பள்ளிக்குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆனால், பல இடங்களில்கெட்டுப்போன பாலை பதுக்கி வைத்து பள்ளிகளுக்கு விநியோகிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அடுத்த செய்தி