ஆப்நகரம்

இனி நீங்களும் சூப்பர் சிங்கர் ஆகலாம்! அரசு இசை பல்கலை.யில் அட்மிஷன் ஆரம்பம்!!

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் பட்டம், முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இசை கலையில் சாதனை புரிய விரும்புகிறவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

Samayam Tamil 31 May 2019, 10:50 am
தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் பட்டம், முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இசை கலையில் சாதனை புரிய விரும்புகிறவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
Samayam Tamil tn music university


நமது நாட்டின் பாரம்பரி இசை, கலைகள், கவின் கலைகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசால், பிரத்யேக பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இசை, பாட்டு, வீணை, பரதநாட்டியம், நாதஸ்வரம், வயலின், பெயின்டிங், விசுவல் கம்யூனிகேஷன் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது. பகுதிநேம், குறுகிய காலம், பட்டயம், இளநிலை பட்டம், முதுநிலை பட்ட படிப்புகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 15ம் தேதி கடைசி நாளாகும்.நுழைவுத்தேர்வு ஜூலை 24ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் சேருவதற்கான வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், கல்விக்கட்டணம், நுழைவுத்தேர்வு பாடத்திட்டம் ஆகியவை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnmfau.ac.in பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை 2019-20 தொடர்பான முழுமையான விபரங்களுக்கு தமிழ்நாடு அரசு இசை கல்லூரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

முக்கிய விபரங்கள்:
1. M.A. Application form 2019-2020
2. M.A. Prospectus 2019-2020
3. M.F.A. Application form 2019-2020
4. M.F.A. Prospectus 2019-2020

அடுத்த செய்தி