ஆப்நகரம்

செமஸ்டர் தேர்வுகள் எப்போது? மத்திய, மாநில அறிவிப்புகளால் மாணவர்கள் குழப்பம்!

TN College Reopens 2020: கல்லூரிகள் எப்போது தொடங்கப்படும், செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து யுஜிசி மற்றும் தமிழக உயர்கல்வித்துறையின் மாறுபட்ட அறிவிப்புகளால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 20 Apr 2020, 11:07 am
கல்லூரிகள் எப்போது தொடங்கப்படும், செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து யுஜிசி மற்றும் தமிழக உயர்கல்வித்துறையின் மாறுபட்ட அறிவிப்புகளால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil TN Colleges Reopening date 2020


கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கற்றலை தொடருவதற்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read This:

இந்த நிலையில், பல்கலைக்கழக, கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் எப்போது திறக்கப்படும், எப்போது செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறித்து முடிவு செய்ய யுஜிசி.,யின் முன்னாள் உறுப்பினர் ஆர்.சி. குஹாட் தலைமையில் 7 பேர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் குழு அளிக்கும் பரிந்துரையின்படி, கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகும் என்று யுஜிசி அறிவித்தது. அதே நேரத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளும் கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேர்வு தேதிகளை யுஜிசி வழிகாட்டுதல்படி நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று AICTE தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் போது, செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா அறிவித்தார். அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மற்ற பல்கலைக்கழகங்களும் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் நடத்தப்படும், இடைவிடாது நடத்தப்படும் என்று அறிவித்தது.

மேற்கண்ட யுஜசி அறிவிப்பும், தமிழக உயர்கல்வித்துறையின் அறிவிப்பும் மாணவர்களை குழப்பமடையச் செய்துள்ளது. இந்த நிலையை மேலும் குழப்பமடையச் செய்யும் வகையில், யுஜிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்லூரிகள் திறப்பு மற்றும் பருவத்தேர்வுகள் நடத்துவது குறித்து, யுஜிசி ஆலோசனைக்குழு விரைவில் ஆலோசித்து அறிக்கை சமர்பிக்கும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஆலோசனை நடத்தி, உரிய வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் வெளியிடப்படும். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் வழிகாட்டுதல்படி, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தங்களது செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது, வகுப்புகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி