ஆப்நகரம்

12ஆம் வகுப்பு தேர்வு: தமிழ் மொழி முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

''தமிழ் மொழி முதல் தாள் தேர்வு இன்று எளிதாக இருந்தது'' என்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

TOI Contributor 2 Mar 2017, 1:45 pm
''தமிழ் மொழி முதல் தாள் தேர்வு இன்று எளிதாக இருந்தது'' என்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil tamil paper is easy 2 students feedback
12ஆம் வகுப்பு தேர்வு: தமிழ் மொழி முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து


தமிழகம் முழுவதும் இன்று 12ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் மொழி முதல் தாள் தேர்வு எழுதினர். சிலர் தங்களது முதல் தாளாக இந்தி, சமஸ்கிருதம் தேர்வுகளையும் எழுதினர். இந்தத் தேர்வு எளிதாக இருந்தது என்று மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

12ஆம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வானது இன்று முதல் துவங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,98,763 மாணவ,மாணவிகள் எழுதினர். இவர்களில் 4,17,994 பேர் மாணவர்கள்.4,80,837 பேர் மாணவிகள். ஒருவர் திருநங்கை ஆவார். இதுதவிர சிறையில் இருக்கக் கூடிய கைதிகள் 98 பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் தேர்வெழுதும் மாணவ,மாணவிகளுக்கு, தமிழக அரசுத் தேர்வுகள் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்வு அறைக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது, செருப்பு அணிந்து வரக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றக் கூடிய ஆசிரியர்களும், தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக 4000 பேர் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

Tamil Paper is easy: +2 students feedback

அடுத்த செய்தி