ஆப்நகரம்

கடும் நிதி நெருக்கடி… இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியாது..

தமிழகத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் சிறுபாண்மை பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Sep 2019, 12:09 pm
நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு உதவிப் பெறும் பள்ளிகள், சிறுபாண்மை பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tn govt school teachers


தமிழகத்தில் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், சிறுபாண்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்தால் நிதி பற்றாக்குறை ஏற்படுவதாக, அரசு நிதித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இனி வரும் காலங்களில் நிதி இழப்பீடு ஏற்பாடதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

(5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு.. ஆனால்....)


இதையடுயடுத்து பள்ளிக்கல்வி முதன்னை செயலர் பிரதீப், அரசு உதவிப்பெறும் பள்ளி, சிறுபாண்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் நியமனம் செய்யக்கூடாது என்று அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறுபாண்மை பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய அனுமதி இல்லை.

ஒரு வேளை ஏதேனும் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அருகிலுள்ள மற்ற பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களை தங்கள் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம்.

(நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேர்வு எழுதியது ஒருவர், கல்லூரியில் படிப்பது வேறொருவர்)

மாநிலம் முழுவதும் தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் பள்ளிகள், அரசு விதிமுறைகளின்படி மற்ற பள்ளி ஆசிரியர்களை முறையாக மாற்றம் செய்ய வேண்டும்’. இவ்வாறு பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

தமிழகத்தில் ஒருபுறம் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து லட்சக்கணக்கானோர் உள்ளனர். மறுபுறம் மாணவர்கள் சேர்க்கை குறைவை காரணம் காட்டி, பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அரசு நிதி நெருக்கடியை காரணமாகக் கொண்டு ஆசிரியர்கள் நியமனத்துக்கு முட்டுக்கட்டை போடுவது கல்வியாளர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி